பேஸ்புக்கில் உங்களின்…. புரொஃபைலை லாக் செய்வது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

பேஸ்புக் புரொஃபைலை லாக் செய்வது எப்படி என்ற சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

2020 ஆம் வருடம் ஆரம்பத்தில் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்காக பேஸ்புக் நிறுவனம் அதன் ப்ரோபைல் லாக் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த அம்சமானது நம்முடைய ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் இல்லாத நபர்களிடமிருந்து இருந்து ப்ரொபைலை லாக் செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும் இந்த அம்சம் நாட்டில் சில பயனர்கள் மட்டுமே அணுக முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கீழ்காணும் இந்த சில எளிய வழிமுறைகளை பயன்படுத்தி உங்கள் பேஸ்புக் ப்ரோபைலை லாக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் .

கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் சென்று பேஸ்புக் அப்டேட் செய்ய வேண்டும்.
இதையடுத்து உங்கள் ப்ரொபைல் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
பின்னர் உங்கள் ப்ரொபைலில் இருக்கும் more என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
பின்னர் தோன்றும் மெனுவில் இருந்து லாக் ப்ரொஃபைல் விருப்பத்தை எடுத்து அதை கிளிக் செய்ய வேண்டும்.
அதை க்ளிக் செய்த பிறகு உங்கள் ஸ்கிரீனில் உங்கள் ப்ரொஃபைல் லாக் செய்யப்படலாமா? என்கின்ற conform மெசேஜ் வரும்.
இப்போது உங்கள் புரோஃபலை லாக் செய்ய lock profile என்பதை அழுத்தவும்.
அவ்வளவு தான் உங்கள் ப்ரொஃபைல் லாக் செய்யப்பட்டுவிட்டால் பிரெண்ட் லிஸ்ட் இல்லாத வேறு எவராலும் உங்களுடைய ப்ரோபைலை பார்க்க முடியாது. ஏன் உங்களுடைய ப்ரொபைல் பிக்சரை கூட பெரிதுபடுத்தி பார்க்க இயலாது. எனவே அது உங்களின் account தான் என்பதை தவிர்த்து உங்கள் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை மற்றவர்கள் பார்க்க கூடாது என்றால் பேஸ்புக் ப்ரோபைலை லாக் செய்து விடலாம்.

இந்த குறிப்பிட்ட அம்சம் செயல்படுத்தப்பட்டவுடன் கடந்த காலத்தில் நீங்கள் பப்ளிக்காக பகிர்ந்த எல்லா போஸ்டர்கள் மற்றும் புகைப்படங்கள் பிரெண்ட்ஸ் என்று மாறும். இதன்மூலம் குறிப்பாக பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும். இன்றைய காலகட்டத்தில் இணையதளம் மூலமாக பெண்களின் புகைப்படங்களை எடுத்து மார்பிங் செய்து தவறான வலிக்கு சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த அம்சத்தின் மூலம் இத்தகைய குற்றச்செயல்கள் தடுக்கப்படும்.

Exit mobile version