குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபாணி திடீர் ராஜினாமா ! – இந்த வருடத்தில் பாஜக ஆட்சியில் பதவி விலகும் 4வது முதலமைச்சர்

1998ம் ஆண்டு முதல் இப்போது குஜராத் மாநிலம் பாரதிய ஜனதா கட்சியின் கோட்டையாக உள்ளது. இப்போது நாட்டின் பிரதமராக உள்ள பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாகவும், 2002 முதல்  2012 வரை அம்மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்; இப்போது பாரதிய ஜனதா அரசே அங்கு ஆட்சியில் உள்ளது. மாநிலத்தின் முதலமைச்சராக விஜய் ரூபானி 2017ம் ஆண்டு முதல் பதவியில் உள்ளார். இவருடைய பதிவு காலம் முடிவடைய இன்னும் 1 வருடம் உள்ள நிலையில் இன்று குஜராத் மாநிலத்தின் ராஜ்பவனில் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்-தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது எனக்கு வாய்ப்பு வழங்கிய பாஜக தலைமைக்கு நன்றி என தெரிவித்தார். ஆனால், இப்போது வரை ஏன்? ராஜினாமா செய்தார் என்ற காரணம் அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை.

இந்நிலையில், பாரதிய ஜனதா அரசியல் வட்டாரங்கள் 2022 தேர்தலை மையப்படுத்தி பாஜக தலைமையின் வலியுறுத்தல் அடிப்படையில் பதவி விலகி இருக்கலாம் என்கிறார்கள். காரணம், நேற்று பாஜக மூத்த தலைவரும் ,உள்துறை அமைச்சருமான அமித்ஷா குஜராத் விஜயம் மேற்கொண்டு இருந்தார். மறுநாளான இன்றே விஜய் ரூபாணி ராஜினாமா என்பது அரசியல் மாற்றத்தின் துவக்கம் என சொல்லப்படுகிறது. இந்த ஆண்டில் பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் பதிவியில் இருந்து விலகிய 4 முதலமைச்சர் விஜய் ரூபாணி ஆவார். சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் எடியூரப்பா, உத்தரகண்ட்-ல் திரிவேந்திர ராவத் மற்றும் தீரத் சிங் ராவத் ஆகியோர் அடுத்தடுத்து பதவி விலகினர். அரசியல் வட்டாரங்களின் தகவலின் படி ஏற்கனவே பாஜக தலைமை குஜராத் மாநிலத்தின் முதலமைச்சரை முடிவு செய்துள்ளது எனவும், பதிவு விலகியுள்ள விஜய் ரூபாணிக்கு ஆளுநர் அல்லது பாஜக தலைமையில் இடம் அளிப்பதற்கான வாய்ப்பு வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அடுத்த முதலமைச்சர் தேர்தெடுக்கும் வரை குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக விஜய் ரூபாணி நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version