தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக் குறைவால் காலமானார்

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா (வயது 88), வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

ரோசய்யா, 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியவர். போலவே ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சராக 2009 முதல் 2010-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர்.

இவர் தற்போது ஐதராபாத்தில் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமாகியுள்ளார். கடந்த 1933-ம் ஆண்டு பிறந்த இவர், தனது 88 -வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

Exit mobile version