தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
முத்துராமலிங்கத் தேவரின் 114ஆவது ஜெயந்தி, அவரது 59வது குரு பூஜையாகவும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்க பசும்பொன் செல்லும்வழியில் மதுரையில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்றைய தினம் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.