கார் ஓட்டும்போது திடீரென பிரேக் பிடிக்கவில்லை : என்ன செய்யலாம்?
வாகன ஓட்டிகளுக்கு வாகன இயக்கம் சார்ந்த விஷயங்கள் சவாலாக இருக்கலாம். குறிப்பாக புதியதாக கார் வாங்கியவர்களுக்கு அதன் இயக்கம் குறித்தும், சாலையில் ஓட்டுவது குறித்தும் கேள்விகள் அவ்வப்போது எழலாம். நன்கு பழகி, அனைத்து சாலை வகைகளிலும் பயிற்சி பெறுவது அவசியமாகிறது. கார் ஓட்டும்போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்பது அடிக்கடி எழும் கேள்வியாக இருக்கலாம். அதற்கான சில குறிப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளது
- சாலை ஓரமாகச் செல்லுங்கள்
போக்குவரத்து வேகம் அறிந்து நிதானமாக செயல்படுங்கள். லேன் மாறும்போது, சிக்னல் காட்டிவிட்டு கவனமாக செல்லுங்கள்
- ஆக்ஸிலிரேட்டர் கோளாறு
ரேஸ் செய்யும் பெடலை மிதித்தவுடன், அதுவிடுபடாமல் போனால் கார் அதிக வேகமாக போகும். அப்போது உடனே பிரேக் பெடலை மிதிப்பதை தடுக்கவும். ஒரீரு முறை மீண்டும் ரேஸ் பெடலை மிதிக்கலாம், அல்லது உங்களுடைய கார் பிளோர் மேட்டை சரி செய்யலாம்.
- எச்சரிக்கை விடுங்கள்
உங்களுடைய காரின் அனைத்து இண்டிகேட்டர் விளக்குகளையும் எரியவிடுங்கள். இதனால் சகா பயணிகள் உங்கள் நிலை புரிந்து விலகிச் செல்வார்கள். பெரும் விபத்துகளை தடுக்கலாம்.
- கியரைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்
இப்படி செய்வதால் எஞ்சினில் பிரேக்கிங் ஏற்பட்டு காரினுடைய வேகம் 5 – 10 கி.மீ வரை குறையும். இப்படி செய்வது மேனுவல் கியர் கொண்ட கார்களுக்கு சாத்தியமாகும். ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் காரில் ஆட்டோ கியர் இருந்தால், ஒரேவழி தான் உள்ளது. அவசர காலம் ஏற்படும் போது காரை மேனுவல் கியருக்கு மாற்றி பெடல் ஷிப்டர் மூலம் காரின் கியரை குறைப்பது நல்ல பலனை வழங்கும். இவ்வாறு செய்யும் போது ரிவெர்ஸ் கியர் போடக்கூடாது. அப்படி செய்தால் எஞ்சின் பாழாகிவிடும்.
- ஹாண்ட் பிரேக் போடலாமே
ஒருவேளை வேகமாக காரில் சென்று கொண்டிருந்தால், ஹேண்டு பிரேக் பயன்படுத்துவது தவறு. எஞ்சின் பிரேக்கை பயன்படுத்தி காரின் வேகத்தை 20 கி.மீ-க்குள் கொண்டுவந்துவிட்டால் ஹேண்டு பிரேக்கை போட்டு வாகனத்தை நிறுத்துவிடலாம். ஆனால் அதிலும் சிக்கல் உள்ளது. பின்பக்க சக்கரங்களுக்காக செயல்படக்கூடியது தான் ஹேண்டு பிரேக். கார் வேகத்தை குறைத்து ஹேண்டு பிரேக் போடும் போது, அது ஸ்கிட்டாக வாய்ப்பு உள்ளது. அப்போது நீங்கள் வாகனத்தை கட்டுப்பாட்டுடன் இயக்குவது மிக மிக அவசியம். ஒருவேளை உங்களுடைய காரில் எலெக்ட்ரானிக் ஹேண்டு பிரேக் இருந்தால், இதுபோன்ற அவசர சமயங்களில் வாகனம் ஸ்கிட் ஆகாமல் பார்த்துக்கொள்ளும்.