மீண்டும் கீழடிக்கு வரும் அமர்நாத் ராமகிருஷ்ணன்


கீழடி தொல்லியலின் கண்காணிப்பாளராக இருந்த “அமர்நாத் ராமகிருஷ்ணன்” மீண்டும் தமிழகத்துக்கே இடமாற்றம்.

மதுரை மாவட்டம் கீழடி அகவராய்ச்சியின் பெரும் பங்கை கொண்டு இருப்பவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். கீழடியின் பண்டைய கால நாகரீகத்தை வெளியில் கொண்டுவர பெரும் முயற்சிகளையும் அகழ்வாராய்ச்சிகளையும் மேற்கொண்டார். ஆனால், 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று கொண்டு இருக்கும் போதே திடீரென அசாம் மாநில பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் இவ்விவகரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு அசாம் தொல்லியல் பணியில் உள்ள அமர்நாத் ராமகிருஷ்ணனை தற்காலிமாக கீழடி பணிக்கு மாற்றுமாறு உத்தரவு எல்லாம் பிறப்பிக்கப்பட்ட நாட்கள் உண்டு!. இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு பணி மாறுதல் கோரி சென்னை, திரிசூர் , கோவா ஆகிய இடங்ககை கேட்டார். 2019 நவம்பர் 15ம் தேதி கோவா மாநிலத்திற்கு பணி மாறுதல் வழங்கி இந்திய தொல்லியல்துறை அனுமதி பிரிபித்தது. கோவா மாநிலத்தில் தன்னுடைய பணிகளை கவனித்து வந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் துறையின் சென்னை (தமிழ்நாடு ) பிரிவுக்கு மீண்டும் இடமாற்றம் செய்து இந்திய தொல்லியல்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய தொல்லியல்த்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமர்மத் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேரை பணி மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதில், கோவா பிரிவில் உள்ள அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த மாற்றம் தொல்லியல் ஆய்வாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஏற்கனவே தமிழகத்தில் அமைந்துள்ள மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு தொல்லியல் மற்றும் சங்ககால வரலாற்றை ஆய்வு செய்ததில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணி மாற்றம் கூடுதல் வலுசேர்க்கும் என்கிறார்கள்.

Exit mobile version