அமராவதி உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

உடுமலை அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்து வருவதால், உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது.

உடுமலை அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், கனமழை காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை நிரம்பியதால் ஜூலை 23ம் தேதி அன்று உபரி நீர் வெளியேற்ற ஆணை திறக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது மழை பெருகி வருகிறது. அதனால் ஆணை நிரம்பி வருகிறது. அதன் காரணாமாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, ஆற்று மதகுகள் வழியாக, வினாடிக்கு, 1,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி அமராவதி அணையில் மொத்தமுள்ள, 90 அடியில், 88.49 அடி நீர் மட்டம் இருந்தது.

மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 3,910.29 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு, 1,023 கன அடியாகவும், உபரி நீர் வெளியேற்றம், 1,175 கன அடியாக இருந்தது.

Exit mobile version