எம் எஸ் பாஸ்கர் மகள் திருமண வரவேற்பு: பிரபலங்கள் வாழ்த்து!

நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 1987 ஆம் ஆண்டு திரைக்கு வந்த திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தில் சின்ன கதாபாத்திரத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்தப் பட த்தைத் தொடர்ந்து வரிசையாக மக்கள் என் பக்கம், முதல் குரல், கோட்டை மாரியம்மன், முத்தம், மிலிட்டரி, எங்கள் அண்ணா, கஜேந்திரா, திருப்பாச்சி, சுக்ரன், சிவகாசி, வீராச்சாமி, அயோக்யா, சுல்தான் என்று 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், இவரது மகள் ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் என் ஏ சுதாகரின் மகன் அகுல் என்பவருக்கும் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, கவின், விஜய் ஆண்டனி, நாசர், ராதாரவி, அருண் விஜய், பிரசன்னா, மயில்சாமி, கருணாஸ், சென்றாயன் ஆகியோர் உள்பட பல நடிகர்களும், சினேகா, தேவதர்ஷினி, குட்டி பத்மினி, சந்தியா, சாந்தினி உள்பட பல நடிகைகளும், இயக்குநர்களும், அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version