வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு? மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பத்தூர் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட இலவச வீட்டுமணைப் பட்டா மோசடி என பொய் புகார் அளித்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புத்தாகரம் என்ற கிராமத்தில் பல வருடங்களாக ஊர் பொதுமக்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்ததின் பேரில் ஆதிதிராவிடர் மக்களின் வாழ்வாதாரத்தினை பெருக்கும் விதமாக ஆதிதிராவிடர் நலத்துறை நேரடியாக பார்வையிட்டு தகுதி வாய்ந்த குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி உள்ளனர்.

இந்நிலையில் பட்டா பெற்றவர்கள் பெரும்பான்மையாக ஏழ்மை நிலையில் கூலி வேலை செய்து வருகின்றனர். ஆதிதிராவிடர் நலத்துறை நல அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரின் நேரடி பார்வையில் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதே ஊரைச் சேர்ந்த சிலர் பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், லஞ்சம் பெற்றுக்கொண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி உள்ளனர் என அனைத்து அரசு ஊழியர்கள் மீதும் சில நல்ல எண்ணத்தின் அடிப்படையில் கிராம வளர்ச்சிக்கு முன் நின்று செய்பவர்களை வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சி கொண்டு தொடர்ந்து குற்றம் சாட்டி மனு அளித்து வருகின்றனர் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் அதே பகுதியினைச் சேர்ந்த உண்ணாமலை ஏற்கனவே இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றதோடு மீண்டும் கேட்பதாகவும், ஜனனி, பாப்பு, சகுந்தலா, சரண்யா, மதியழகன் ஆகியோருக்கும் அரசு சார்பில் பட்டா பெற்ற நிலையில் மீண்டும் வழங்க வேண்டும் என அரசு ஊழியர்களை மிரட்டி வருவதோடு மனு மீது விசாரணை நடந்து வரும் நிலையில் சிலர் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்கள், இந்து ஆதிதிராவிட வகுப்பில் வசிக்கும் எங்கள் பகுதி ஊர் பொது மக்களுக்கு இருபது வருடங்களுக்கு முன்பாகவே சுமார் ஒரு ஏக்கர் நிலம் நீண்ட போராட்டத்திற்கு பின்பு மாவட்ட துணை ஆட்சியர் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு உரிய உண்மையான நபர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் எங்கள் பகுதியில் ஏற்கனவே இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வாங்கிய ஒரு சிலர் மீண்டும் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் என்று வலியுறுத்தி அதிகாரிகளிடம் சென்று மனு கொடுப்பதாலும் நோய்த்தொற்று காரணம் காட்டி துறை சார்ந்த அதிகாரிகள் இன்னும் எங்களுக்கு கொடுக்க வேண்டிய இடத்தை அளந்து கொடுக்காமல் இருப்பதாலும் தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக இடத்தை அளந்து கொடுக்க வேண்டும் என மனு வழங்கியதின் பேரில் மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version