டிக்டாக் பிரபலம் செய்த அட்டூழியம்… சிறுமியை மிரட்டி சீரழித்த கொடூர சம்பவம்…!!

டிக்டாக் பிரபலம் செய்த அட்டூழியம் சிறுமியை மிரட்டி சீரழித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி னத்தை சேர்ந்த பார்கவ் டிக்டாக் செயலியில் ஃபன்பக்கெட் பார்கவ் என்ற பெயரில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளான். இந்த வீடியோ மூலம் பிரபலம் அடைந்த டிக்டாக் பார்கவ் 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததைத் தொடர்ந்து , போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவன் சிப்பாடா பார்கவ் . டிக்டாக் செயலி மூலம் பிரபலமான பார்கவ் , தனது நகைச்சுவையான வீடியோக்கள் வெளியிட்டு வந்ததால் ‘ ஃபன்பக்கெட் பார்கவ் ‘ என்று பலராலும் அறியப்பட்டு வந்தான் . ஓ மை காட் … ஓ மை காட் .. ” என்று இவன் பேசும் வீடியோக்களால் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான பார்கவ் , தற்போது உண்மையிலேயே ஓ மை காட் ‘ என்று கூறியபடி தான் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான் .
கடந்தாண்டு டிக்டாக் தடைசெய்யப்பட்டாலும் , அதன்மூலம் கிடைத்த புகழினால் பார்கவ் , யூடிபிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தான் . இந்தநிலையில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளான் . ஒருகட்டத்தில் பார்கவ் அந்த சிறுமியிடம் தனது காதலை கூறியுள்ளான் .அதற்கு அந்த சிறுமி மறுத்துள்ளார் . இதனையடுத்து , சிறுமியிடம் , உனது அந்தரங்கமான புகைப்படங்களும் , வீடியோக்களும் என்னிடம் இருக்கிறது . நான் சொல்வதை ஏற்க மறுத்தால் , அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் ” என்று மிரட்டி உள்ளான் . இதனைத்தொடர்ந்து பயந்து போன அந்த சிறுமியை , பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் .

இந்த நிலையில் அந்த சிறுமி நான்கு மாதம் கர்ப்பிணியாக உள்ளது அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது . இதனையடுத்து , கடந்த 16 ம் தேதி விசாகபட்டிணத்தில் உள்ள பென்ந்துர்த்தி காவல் நிலையத்தில் டிக்டாக் புகழ் பார்கவ் மீது புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து ஐதராபாத்தின் கொம்பள்ளியில் இருந்த பார்கவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த அவனிடமிருந்து கார் மற்றும் மொபைல் போன்றவற்றை பறிமுதல் செய்தனர் . மேலும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பார்கவ் மீது போக்சோ உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் .

Exit mobile version