ஊருக்குள் புகுந்த கருஞ்சிறுத்தை… தெருநாயை வேட்டையாடிய காட்சி… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!!

கர்நாடகாவில் கிராமத்தில் புகுந்த கருஞ்சிறுத்தை ஒன்று தெரு நாயை வேட்டையாடி செல்லும் காட்சியை சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவின் கபினி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று உலாவிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை வன சேவை அதிகாரி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் கருஞ்சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் இருந்த தெரு நாய் ஒன்றை வேட்டையாடி சென்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

ஒரு மலைப்பாங்கான பகுதிக்கு அருகில் கரடுமுரடான பாதையில் கருஞ்சிறுத்தை ஒன்று வேட்டையாடுவதற்காக அந்தக் கிராமத்திற்குள் நுழைந்துள்ளது.

அப்போது திடீரென ஒரு நாயின் அலறல் சத்தம் மட்டும் கேட்டது.

அதன்பிறகு அந்த சிறுத்தை தனக்கான இறையை வேட்டையாடி நாயை வாயில் கவ்விக்கொண்டு கரடுமுரடான பாதையை நோக்கி வேகமாக ஓடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த காட்சியை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கருஞ்சிறுத்தைக்கு நாய்கள் மிகவும் பிடித்தமான இரை என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே சிறுத்தைகள் மற்றும் கரும் சிறுத்தைகள், புலி நடமாட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version