குஜராத்தில் 10 நாட்களில் அமைக்கப்பட்ட கொரோனா மையம்… 900 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை இன்று திறப்பு…

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பத்தே நாட்களில் 900 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட இருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 முதல் பல கோடி உயிர்கள் பலியாகி உள்ளது. அதேபோல், இந்தியாவில் ஒரேநாளில் இந்த கொடூர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இதனால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற முக்கிய காரணங்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் இணைந்து அகமதாபாத்தில் தன்வந்தரி கொரோனா மருத்துவமனையை அமைத்துள்ளனர்.

Read more – மே, ஜீன் மாதங்களில் ரேஷன் அட்டை குடும்பத்தாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி : பிரதமர் மோடி அறிவிப்பு

இதை, சுமார் 150 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உட்பட மொத்தம் 900 படுக்கைகள் அமைக்கப்பட்டும், அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதிகளும் அமைத்து தரப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மருத்துவமனைகளுக்கான பணிகளை அமித் ஷா, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பார்வையிட்டனர். மேலும், இந்த தன்வந்தரி கொரோனா மருத்துவமனை பத்தே நாட்களில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version