105 நிமிடத்தில் 36 புத்தகங்களை படித்து சாதனை படைத்த 5 வயது சிறுமி…!!

105 நிமிடத்தில் 36 புத்தகங்களை படித்து சாதனை படைத்த 5 வயது சிறுமி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

105  நிமிடத்தில் 36 புத்தகங்களை வாசித்து இந்தியாவை பூர்வீக்கமாக கொண்ட சிறுமி சாதனை படைத்துள்ளார்.கியாரா கவுர் என்ற 5 வயது இந்திய அமெரிக்க சிறுமி, 2 மணி நேரத்தில் 36 புத்தகங்களை படித்து லண்டனின் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகியவற்றில் இடம்பெற்று உலகசாதனை படைத்திருக்கிறார்.

குழந்தைக்கு ஐந்து வயதில் இந்த அளவு வேகத்தில் ஒரு புத்தகத்தை வாய்விட்டு படித்து முடிக்கும் திறன் இவருக்கு வந்ததை அடுத்து தங்களது மகளின் திறமையை உலகுக்கு காட்ட இவரது பெற்றோர் விரும்பினர்.கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதியன்று  இந்த சாதனையை படைத்த கியாராவை, உலக சாதனை புத்தகம் ‘குழந்தை அதிசயம்’ என்று அழைக்கிறது. தற்போது அபுதாபியில் வசிக்கும் இந்திய-அமெரிக்க சிறுமியான இவர் சிறுவயதிலேயே புத்தகப்பிரியையானார்.

கியாரா பேசுகையில், “புத்தகங்களிலிருந்து படிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. புத்தகங்களை நாம் விரும்பும் இடத்திற்கு எடுத்துச் செல்லலாம். தொலைபேசிகளில் படிப்பதில் அல்லது வீடியோவைப் பார்ப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இணையம் இல்லாவிட்டால் படிக்க முடியாது” என்று தெரிவித்தார். இவரது மொழி ஆற்றல் மற்றும் வேகத்தை பாராட்டி இந்த கவுரவம் இவருக்கு கிடைத்துள்ளது. உலகில் மிகக்குறைந்த வயதில் இந்த சாதனையை படைத்த குழந்தை கிராயா. எதிர்காலத்தில் மருத்துவராகும் லட்சியம் கொண்ட கிராயா தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

Exit mobile version