எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 3,803 நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 3803
பணி: Nursing Officer
தகுதி: பி.எஸ்சி நர்சிங் முடித்தவர்கள் அல்லது பொது நர்சிங் பிரிவில் டிப்ளோமா முடித்து மாநில, மத்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
அனுபவம்: குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 முதல் 34800+தர ஊதியம் ரூ.4600 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500-ம், மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.1,200 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஏய்ம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.aiimsexams.org இன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.08.2020
முழுமையான விவரங்களுக்கு https://www.aiimsexams.org என்ற இணைப்பை அணுகவும்