தமிழ்நாடு மருத்துவ சேவைக்கான ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TN MRB) காலியாக உள்ள Physician Assistant மற்றும் Skilled Assistant Grade II பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 101 காலிப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள் விவரம்:
Physician Assistant – 14
Skilled Assistant Grade II – 87
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ லிங்க் மூலம் தெரிந்துகொள்ளவும்.
கல்வித்தகுதி :
Physician Assistant – B.Sc Degree (Allied Health Science) / (Physician Assistant) முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Skilled Assistant Grade II – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்:
Physician Assistant – ரூ. 35,100 முதல் ரூ.1,12,400 வரை
Skilled Assistant Grade II – ரூ. 19,500 முதல் ரூ.62200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
SC / SCA / ST / DAP(PH) / DW- ரூ.250/-
Others – ரூ.500/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் 16.08.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.