தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு நியாய விலைக்கடைகளில் உள்ள, விற்பனையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணியிடங்கள்:
விற்பனையாளர் பதவிக்கு 26 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.01.2020 அன்று, விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
விற்பனையாளர் – ரூ.4,300 to ரூ.12,000
விண்ணப்பக்கட்டணம் :
நியாயவிலைக்கடை விற்பனையாளர் – ரூ. 150 /-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முகவரிக்கு 29.08.2020 அன்று மாலை 5.45 மணிக்கோ அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.