மாஸ்க் இல்லையா ? எடு 10,000 அபராதம்… உத்திரப்பிரதேச முதல்வர் அதிரடி உத்தரவு

உத்திரப்பிரதேச மாநிலத்தில் முக கவசம் அணியாமல் இருக்கும் நபர்களுக்கு 10, 000 வசூலிக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் தண்டனை வழங்கப்படுகிறது.

Read more – வாக்கு எண்ணும் மையத்திற்குள் சந்தேகத்திற்குரிய நபர்கள் : பொன்முடி குற்றசாட்டு

குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் இந்த தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருவதால் பல உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். இந்த சூழலில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் முக கவசம் அணியாமல் முதல் முறை பிடிபட்டால் ரூ.1000 அபராதம், இரண்டாவது முறை பிடிபட்டால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version