தேதி குறிப்பிடாமல் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

கொரோனா பரவல் காரணமாக முதுநிலை நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலின் 2 ம் அலை நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் வருகின்றனர்.

இந்தநிலையில் வரும் ஏப்ரல் 18 ம் தேதி முதுநிலை நீட் தேர்வு இந்தியா முழுவதும் நடைபெறும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து, இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி பலர் கோரிக்கை விடுத்தனர். மேலும், சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கையும் தொடர்ந்தனர்.

Read more – இன்றைய ராசிபலன் 16.04.2021!!!

தற்போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கொரோனா பரவல் காரணமாக மருத்துவ மாணவர்களின் நலன் கருதி வரும் ஏப்ரல் 18 ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version