ஐந்து திரைப்பட ஊடக பிரிவுகளை ஒன்றாக இணைக்க மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி:
இந்தியாவில் வருடத்திற்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்கள் நாடுமுழுவதும் வெளியாகி வருகிறது. உலகளவில் அதிகப்படங்கள் வெளியாகும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதல் இடம் வகித்து வருகிறது.
இந்தநிலையில், திரைப்பட பிரிவு, திரைப்பட திருவிழா இயக்குநரகம், இந்தியாவின் தேசிய திரைப்பட காப்பகம், இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம் ஆகியவற்றை தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துடன் இணைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Read more – சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டண வசூல் காலவரையின்றி நிறுத்தி வைப்பு : சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்
இதையடுத்து, தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்தின் கீழ் திரைப்பட ஊடக பிரிவுகளில் இனி செயல்படும்.இதில், சினிமா ஊடக நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் ஊழியர்களை மாற்றுதல் மற்றும் இணைத்தல் போன்ற அனைத்து செயல்பாட்டு அம்சங்களையும் திரைப்பட கழகத்தின் ஆலோசகர் மற்றும் சட்ட ஆலோசகர்கள் இனி வழங்க உள்ளனர்.மேலும், ஊடக நிறுவன ஊழியர்கள் நலன்கள் குறித்தும், எந்த ஊழியர்களும் தேவை இல்லாமல் பணிநீக்கம் செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.




