மத்திய பல்கலைக்கழங்களில் இணைவதற்கு வரும் கல்வியாண்டு முதல் பொதுநுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:
மத்திய பல்கலைக்கழகங்களில் இணைவதற்கு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் கட்ஆப் மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமல் பொது நுழைவு தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான திறனாய்வு தேர்வு முறைகளை பரிந்துரை செய்யும் வகையில் ஏழு உறுப்பினர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த குழு இன்னும் ஒரு மாதத்தில் தேர்வு தொடர்பான அறிக்கையை சமர்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக உயர்கல்வி செயலாளர் அமித் கரே தெரிவிக்கையில், வரும் 2021-2022 ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு பொது நுழைவுத்தேர்வு தேசிய தேர்வு முகமை மூலமாக நடத்தப்பட்டு சேர்க்கை நடத்தப்படும். இந்த தேர்வு அனைத்து மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Read more – மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் முடிவு: தொடர் போராட்டம் முடிவுக்கு வருமா?
மாணவர்கள் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றநிலையிலும் மத்திய பல்கலைக்கழகங்களில் தேர்வாகவில்லை ஏற்றம், எனவே அனைவருக்கும் பொதுவாக தேர்வு நடத்தி இந்த சேர்க்கை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் 54 மத்திய பல்கலைக்கழகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.




