மேற்கு வங்கத்தில் மீண்டும் ஒரு பரபரப்பு.. பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்..

மேற்கு வங்கத்தில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, அசாம் போன்ற மாநிலங்களுக்கு ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் நடந்து முடித்தநிலையில் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்கத்தில் 5 கட்டங்களாக 180 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

இந்தநிலையில், மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்க பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும்போட்டி நிலவி வருவதால் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. தொடர்ந்து இரண்டு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் அவ்வப்போது மோதி கொண்ட சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

Read more – இரவு நேர ஊரடங்கின் போதும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

இதையடுத்து, தற்போது பனிஹதி என்ற பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே காரணம் என்றும், ஆளுங்கட்சியினரின் இந்த அராஜகத்தை காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த தொகுதி பாஜக வேட்பாளர் சன்மோய் பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

Exit mobile version