தடுப்பூசி விலையை குறைத்து கொள்ளுங்கள்… தயாரிப்பு நிறுவனங்களுக்கு கோரிக்கை வைக்கும் மத்திய அரசு..

கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க வேண்டுமென்று தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

வருகின்ற மே 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. மேலும், அதற்கான மருந்துகளை மாநில அரசுகள் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசி விலை என்பது ரூ.1,200 எனவும், கோவிஷீல்டு தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து பல மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக சாடியிருந்தனர். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தி இருந்தார்.

Read more – இன்றைய ராசிபலன் 27.04.2021!!!

இந்த நிலையில் தற்போது மத்திய சுகாதாரத்துறையின் அமைச்சகம் சார்பில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்கள் உடனடியாக விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தடுப்பூசியின் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version