ஆக்ஸிஜன் பற்றாக்குறையா ? இனி இல்லை… புதிய உற்பத்தி ஆலை அமைக்க மத்திய அரசு முடிவு..

நாடுமுழுவதும் 100 மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் மட்டும் 2 லட்சத்து 739 புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேடர்கள் இல்லாமல் நோயாளிகளுக்கு வழங்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகம் தவித்து வருகிறது.

Read more – தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கா ? தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

இந்தநிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை அமைக்க PM-CARES நிதியில் இருந்து நிதியுதவி அளிக்கப்படும் என்றும், இதனால் மருத்துவமனையிலேயே ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version