மேற்கு வங்கத்தில் நேரடி தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை… ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று…

மேற்கு வங்கத்தில் நேரடி தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இங்கு 6 கட்ட தேர்தல் முடிந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக நேரடி தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Read more – கொரோனாவின் ருத்ர தாண்டவம்.. பலியான உயிர்களின் எண்ணிக்கை… வெளியான அதிர்ச்சிகர புகைப்படம்

பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகளே கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் நேரடி பிரச்சாரங்களை மேற்கொள்ளாமல் காணொளி காட்சி மூலம் பரப்புரையை பாதுகாப்பாக நடத்தவும் அறிவுரை வழங்கியுள்ளது.

தொடர்ந்து இந்தியா முழுவதும் நாளொன்றுக்கு 3 லட்சம் நபர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களும் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version