பற்றாக்குறையை போக்க மருத்துவ சேவைகளுக்கு மட்டுமே ஆக்சிஜனை பயன்படுத்துங்கள்.. மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்த மத்திய அரசு…

நாடுமுழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதால் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாமல் மத்திய அரசு திணறிவருகிறது. இந்த பற்றாக்குறை காரணமாக பல உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.

இந்தநிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மத்திய உள்துறை அமைச்சகம் தொழிற்சாலைகளுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், தொழிற்சாலைகள் திரவு ஆக்சிஜன் வைத்திருந்தால் உடனடியாக மருத்துவத் தேவைக்கு வழங்க வேண்டும் என்றும், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தங்களால் முடிந்த அளவுக்கு கூடுதலான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது.

Read more – ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா ? அனைத்துக்கட்சிகளுடன் இன்று முதல்வர் ஆலோசனை

தொழிற்சாலைகளில் திரவ ஆக்சிஜன் இருந்தால் அதை மருத்துவ சேவைகளுக்கு வழங்க வேண்டும், அதேபோல் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மருத்துவ சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவித்த மத்திய அரசு, இந்த உத்தரவு மறுஉத்தரவு வரும் வரை தொடரும் என்று தெரிவித்துள்ளது.

Exit mobile version