ஊரடங்கு காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி பாதிக்கக்கூடாது… மாநில அரசுக்கு கோரிக்கை வைத்த மத்திய அரசு..

ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி பாதிக்கக்கூடாது என்று மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் பல மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

Read more – இன்றைய ராசிபலன் 19.04.2021!!!

இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முழுதும் நாடுமுழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அறிவுத்தப்பட்டது. மேலும், நாடுமுழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால் இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகரன் கூறியதாவது :

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு 3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இதுவரை 12 கோடியே 26 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாலும், கொரோனா தடுப்பூசி மையத்திற்கு மக்கள் சென்று வர எந்த தடையும் இருக்கக்கூடாது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் இருந்து பிறகு பரவாமல் இருக்க தனி மையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version