மேற்கு வங்க தேர்தலுக்கான 8 ம் கட்ட வாக்குப்பதிவு… அமைதியான முறையில் மக்கள் வாக்களிப்பு..

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கான 8 ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இங்கு 6 கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 34 தொகுதிகளில் 7-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் சார்பில் 34 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணியில் காங்கிரஸ் 18 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 12 இடங்களிலும், ஐ.எஸ்.எப். 4 இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.

Read more – இன்றைய ராசிபலன் 26.04.2021!!!

இந்தநிலையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற இருப்பதால் மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version