காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தின் 53வது கூட்டம் இன்று நடைபெறுகிறது… எடுக்கப்பட போகும் முக்கிய நடவடிக்கைகள் குறித்த விவரங்கள்!!

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தின் 53வது கூட்டம் டெல்லியில் குழுத்தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது.

டெல்லி, காவிரியில் இருந்து கீழ் பாசன வசதி பெறும் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு நீரினை முறைப்படுத்தி வழங்க அமைக்கப்பட்ட காவிரி ஆணைய கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக காவிரி ஒழுங்காகற்று குழு கூட்டம் நடைபெறும்.

அதன் வகையில் “காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 53வது கூட்டம்” அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப்சக்சேனா, காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு உறுப்பினர் , திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் காவேரி தொழில்நுட்பக் குழு உறுப்பினர் பட்டாபிராமன்,செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றைய கூட்டத்தில் காவிரி நீர்படுக்கையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவு,பருவ நிலை, மற்றும் தற்போதைய நீர்வரத்து உள்ளிட்டவை அடங்கிய வானிலை நிலவரம் குறித்தான ஆலோசனை, காவிரியில் உள்ள அணைகளில் இருந்து ஆற்றில் வெளியேற்றப்படும் நீர் தொடர்பான புள்ளி விவரங்கள் குறித்தான ஆலோசனையும் நடைபெறவுள்ளது. மேலும், மாநில அரசுகள் சார்பில் வைக்கப்படவுள்ள கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவு, பற்றாக்குறை தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது. ஏற்கனவே செப்டம்பர் மாதம் வரை 26 டிஎம்சி நீர் தரவேண்டி உள்ளது. அதுபோல இந்த மாதத்திற்கான 20 டிஎம்சி-யில் 6 டிஎம்சி வழங்கப்பட்டுள்ளதால் அதனையும் சேர்த்து மொத்தம் 40 டிஎம்சி நீரை கர்நாடாம் தமிழகத்துக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

Exit mobile version