ஒரே இடத்தில் குவிந்த 23 கிராம மக்கள்… விநோத மோதலால் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஆந்திர மாநிலத்தில் நடந்த விநோத தடியடி திருவிழாவில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் தேவர்கட் மலையில் உள்ள மல்லேஸ்வரர் சாமி கோயிலில் கல்யாண உற்சவம் நடைபெற்றது. உற்சவம் நடந்தது முடிந்ததும், உற்சவ மூர்த்திகளை கைப்பற்றுவதற்காக அங்குள்ள 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், 2 குழுக்களாக பிரிந்து நள்ளிரவில் தங்களுக்குள் தடியடி நடத்தி மோதிக்கொள்வது போல் நடிப்பது வழக்கம். மோதலில் வெர்ரி பெறும் கிராம மக்கள் உற்சவ மூர்த்திகளை கைப்பற்றிச் செல்வார்கள்.

இதற்காக நேற்று 23 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கையில் தடியுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஆராவாரமாக நடைபெற்ற இந்த தடியடி திருவிழாவில், உற்சாவ மூர்த்தியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இரு குழுவினரும் கடுமையாக தாக்கிக் கொண்டதில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் அருகேயுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் மோதிக்கொள்வது போல் நடித்து வந்த கிராம மக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே உண்மையாக தங்களுக்குள் தடியால் அடித்து மோதிக்கொள்வதாக தெரிகிறது. இந்த விநோத திருவிழாவிற்கு தடை விதிக்க அதிகாரிகள் முயன்றாலும், 23 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version