மே, ஜீன் மாதங்களில் ரேஷன் அட்டை குடும்பத்தாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி : பிரதமர் மோடி அறிவிப்பு

நாடுமுழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மே, ஜீன் மாதங்களில் ரேஷன் அட்டை குடும்பத்தாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் நாள் ஒன்றுக்கு 3 லட்சத்தை கடந்து வரும் நிலையில் நேற்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றார்.

அப்பொழுது பேசிய பிரதமர் மோடி, நாடுமுழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. ஆக்ஸிஜன் டேங்கர்களின் பயண நேரத்தை குறைக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆக்ஸிஜனை கொண்டுச் செல்ல ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Read more – ரெம்டெசிவிர் விநியோகத்தில் கட்டுப்பாடு… தமிழகத்திற்கு உதவுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்..

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகளால் போடப்பட்ட ஊரடங்கில் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க மே, ஜீன் மாதங்களில் ரேஷன் அட்டை குடும்பத்தாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version