தாத்தாவிற்கு ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட பேரன்… வதந்தி பரப்பியதாக கிரிமினல் வழக்கு பதிவு

உத்தரபிரதேசத்தில் 88 வயதான தாத்தாவிற்கு ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட பேரனை வதந்தி பரப்பியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று யாராவது சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவலை பரப்பினால் அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், உத்தரபிரதேசம் அமேதி பகுதியை சேர்ந்த ஷஷாங் யாதவ் என்ற இளைஞர் தனது 88 வயதான தாத்தாவிற்கு ஆக்சிஜன் வேண்டி நடிகர் சோனு சூட்டிடம் கோரிக்கை வைத்தார். இந்தநிலையில் அவர் உதவுவதற்கு முன்பே அந்த வயதான தாத்தா உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது.

Read more – ‘ரெம்டெசிவிர்’ உயிர்காக்கும் மருந்து அல்ல : சுகாதாரத்துறை தகவல்

ஆனால், அமேதி நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான ஸ்மிரிதி இராணி ட்விட்டர் பக்கத்திலும் ஷஷாங் யாதவ் பதிவிட்ட பதிவு ஷேர் செய்யப்பட்டது. இதையடுத்து, ஷஷாங்கை பலமுறை தொடர்பு கொண்டபோது முடியவில்லை என்றும், ஷஷாங்கின் தாத்தா கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றும், அவருக்கு ஆக்சிஜன் தேவை என பரிந்துரை செய்யப்படவில்லை என்று அமேதி காவல்துறையினர் ஸ்மிரிதி இராணி தெரிவித்துள்ளனர். இதனால் ஷஷாங் யாதவ் மீது பொதுமக்களிடம் பயத்தை ஏற்படுத்துதல் மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Exit mobile version