“எதை அரசு கையாள வேண்டும் எதை தனியாருக்கு கொடுக்க வேண்டுமென எங்களுக்கு நன்றாக தெரியும்”- பிரதமர் நரேந்திர மோடி

அரசு கையாள தேவையில்லாத துறைகள் மட்டுமே தனியாரிடம் வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் மோடி காணொலி வாயிலாக இந்திய விண்வெளி சங்கத்தை தொடங்கி வைத்து விண்வெளித்துறை பிரதிநிதிகளுடன் நேற்று கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவில் விண்வெளி துறை மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய அளவில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உற்சாகத்துடன் தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய தெளிவான கொள்கையுடன் அரசு முன்னேறிக் கொண்டிருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, அரசு கையாள தேவையில்லாத பல்வேறு துறைகள் தனியார் துறைக்கு வழங்கப்பட்டு வருவதாக விளக்கமளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவற்றில் இன்னும் என்னென்ன துறைகள் அரசு கையாள தேவையில்லாத துறைகள் என்ற கேள்வி சாமனிய மக்களுக்கு எழுந்துள்ளது.

Exit mobile version