ஆயிரக்கணக்கான மனித உயிர்களை காப்பாற்றிய ஆக்சிஜன் மனிதன்

கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது.இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த ஷாஹ்னாவாஸ் ஷேக் என்ற இளைஞர் தனது சொகுசு காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக வழங்கி ஐந்தாயிரத்து 500 மனித உயிர்களை காப்பாற்றி உள்ளார்.

இது குறித்து ஷாஹ்னாவாஸ் ஷேக் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், எனது நண்பணின் சகோதரி ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தது எனக்கு மிகப்பெரிய தாக்கததை ஏற்படுத்தியது.

இதையடுத்து, எனது சொகு காரை விற்று 160 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி கரோனா நோயாளிக்கு வழங்கினேன். தற்போது நிலவிவரும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் அரசு தோல்வியடைந்து விட்டது” என்றார்.

Exit mobile version