டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் இன்று தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி;
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து கடந்த 26 நாட்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில்,வேளாண் மசோதா சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடக்கும் அனைத்து இடங்களிலும் விவசாயிகள் இன்று (திங்கள் கிழமை) தொடர் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.இதுகுறித்து சுவராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,டெல்லி போராட்ட களத்தில் 11 பேர் கொண்ட விவசாய அமைப்பினர் உண்ணாவிரதத்தை தொடர உள்ளனர் என்று தெரிவித்தார்.
Read more – இன்றைய ராசிபலன் 21.12.2020!!!
இதேபோன்று, ஹரியானா மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் காணப்படும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதை 25 ம் தேதியில் இருந்து 27 ம் தேதி வரை விவசாயிகள் தடுத்து நிறுத்த இருக்கிறார்கள் என்று விவசாய தலைவர் ஜெகஜீத்சிங் டாலிவாலா தெரிவித்துள்ளார்.




