இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு என வதந்தி கிளம்பியுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாக வருகிறது, இதனை கட்டுப்படுத்த இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதனால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர். ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து இந்த தகவல் மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 86 லட்சத்திற்கும் மேல் கொரோனாவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதில் ஒரு லட்சத்து இருபத்தி எட்டு ஆயிரத்துக்கும் மேல் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தற்போது முழு ஊரடனகு தளர்க்கப்பட்டு அனைத்தும் இயங்கி வருகின்றது அதனால் கொரோன பாதிப்பும் அதிகளவில் உள்ளது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த இருப்பதாக இந்தி சேனல் ஒன்று அதன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி பதிவிட்டுள்ளது.

ஆனால் அந்த செய்தி உண்மையல்ல, என மத்திய அரசின் The Press Information Bureau (PIB) மறுத்து டுவிட் செய்துள்ளது. இது போன்ற முடிவு ஏதும் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை என்றும் கூறி உள்ளது.




