மத்திய பிரதேசத்தில் 10 முதியவர்களை அரசு ஊழியர்கள் சாலையில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூர் :
மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியை சேர்ந்த நகராட்சி பணியாளர்கள் சிலர் ஆதரவில்லாத முதியவர்களை பிடித்து அரசு காப்பகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் முதியவர்கள் மற்றும் ஆதரவில்லாதவர் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் அவர்களை தங்க வைக்க இடம் இல்லாத காரணத்தினால் ஒரு சிலரை சாலையில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆதரவற்ற முதியவர்களை சாலையில் அவர்களை இறக்கி விட்ட வீடியோ மற்றும் புகைப்படம் வைராலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.மேலும், இந்தூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிகழ்வு குறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
Read more – சாலையில் கிடந்த ஆண்ட்ராய்ட் மொபைல் போனை திருப்பியளித்த திருநங்கை : குவியும் தொடர் பாராட்டுகள்
இந்தநிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வருத்தம் தெரிவித்து நகராட்சி துணை ஆணையாளர் சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து பா.ஜ.க. எம்.பி. சங்கர் லால்வானி அரசு காப்பகத்திற்கு அந்த முதியவர்கள் திரும்ப அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்றார்.
தற்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ. சஞ்சய் சுக்லா போலீசில் ஆதரவில்லாத 10 முதியவர்கள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.




