பாஜக வேட்பாளர் காரில் வாக்கு எந்திரத்தை கொண்டுபோனது நாங்க தான் : அசாம் தேர்தல் அதிகாரிகள்

அசாமில் பாஜக வேட்பாளர் காரில் வாக்கு எந்திரம் இருந்தது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் நேற்று 2 ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. வாக்குபதிவு நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே பாத்தார்கண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கிருஷ்னேந்து பாலின் காரில் இருந்து ஒரு வாக்குப்பதிவு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தநிலையில், அசாம் மாநில தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து, பாஜக வேட்பாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலை புறக்கணிப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Read more – அதிரடி வேட்டையில் இறங்கிய வருமான வரித்துறை : முக ஸ்டாலின் மகள் வீட்டில் ரெய்டு

தற்போது, இதுகுறித்து அசாம் தேர்தல் அதிகாரிகள் புது விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில், வாக்குப்பதிவு எந்திரத்தை எடுத்துச் சென்ற போது கார் பிரேக் டவுன் ஆனதால், வேறு வழியின்றி அப்பகுதியில் வந்த வாகனத்தை வழிமறித்து லிப்ட் கேட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். மேலும், அது பாஜக வேட்பாளருக்கு சொந்தமான கார் என்று அதற்கு பின்னர் தான் தெரியவந்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version