கொரோனா பரவல் எதிரொலி : நாசிக்கில் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தம்

கொரோனா பரவல் காரணமாக நாசிக்கில் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் தண்டனை வழங்கப்படுகிறது.

Read more – யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி செலுத்தக்கூடாது : தமிழக சுகாதாரத்துறை விளக்கம்

அதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தீவிரமடையும் நிலையில் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிரேக் தி செயின் என்ற பரபரப்புரை மேற்கொண்டு வருகிறது. மேலு, இதன் தொடர்ச்சியாக நாசிக் நகரில் உள்ள நாணய அச்சகம் மற்றும் இந்திய அச்சகத்தில் ஏப்ரல் 30 வரை ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மகாராஷ்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version