உள்ளாடைகளைத் திருடி அணிந்ததாகக் கூறி நண்பர் ஒருவரை தொழிலாளி ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் குமார், பஹ்ரைச் பகுதியைச் சேர்ந்த விவேக் சுக்லா இருவரும் கான்பூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தொழிற்சாலை வளாகத்தில் ஒரே அறையில் வசித்து வந்துள்ளனர். சுக்லா, அஜய் குமாரின் உள்ளாடைகளை திருடி அதனை அணிந்துகொண்டு பிராங்க் செய்ய முயன்றுள்ளார். இதனை அஜய் குமார் அறிந்ததும் கோபத்தில் சுக்லாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் நடந்ததாக சக ஊழியர்கள் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி அருகில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சுக்லாவை அஜய்குமார் பலமுறை குத்தியுள்ளார். பின்னர், அஜய் குமார் அங்கிருந்து ஓடியுள்ளார். கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த சுக்லாவை சக ஊழியர்கள் மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர்கள் சுக்லா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அஜய் குமாரின் மீது காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.அவரைக் கைது செய்ய தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.