கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வால் மோடியின் நண்பர்களுக்கே அதிர்ஷ்டம் : ராகுல் காந்தி

கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வால் மோடியின் நண்பர்களுக்கே அதிர்ஷ்டம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

வருகின்ற மே 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தார். மேலும், அதற்கான மருந்துகளை மாநில அரசுகள் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்த நிலையில், சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை 150 ரூபாய்க்கு வழங்கும் என்றும் மாநிலங்களுக்கு 400 ரூபாயும், தனியாருக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்தது.

Read more – கொரோனா பாதிப்பால் மரணமடைந்த சீதாராம் யெச்சூரியின் மகன்…

இந்த தீடிர் விலை உயர்வால் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க கேரளா, சத்தீஸ்கர், பீகார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் முன்வந்தது . மேலும், கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வு பல மாநில அரசு மற்றும் பொதுமக்களிடையே விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில், “நாட்டில் நெருக்கடி நிலைமை மோசமாகி கொண்டே போகிறது. ஆனால் மோடியின் நண்பர்களுக்கு இது அதிர்ஷ்டமாகவும், மாநிலங்களுக்கு மிகவும் துரதிர்ஷ்டமாகவும் மாறி உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

Exit mobile version