48 மணி நேரத்தில் 1000 நபர்களை தாக்கிய கொரோனா.. இருந்தும் தொடர்கிறது ஹரித்வார் கும்பமேளா..

ஹரித்வார் கும்பமேளாவில் 48 மணிநேரத்தில் 1000 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஹரித்வார் கும்பமேளாவானது கடந்த 1 ம் தேதி தொடங்கி வரும் 30 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

ஹரித்வார் கும்பமேளா திருவிழாவில் பங்கேற்பதற்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்றும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் கொரோனா பயமின்றி ஏராளமான பக்தர்கள் ஹரித்வாருக்கு வந்து கங்கையில் புனித நீராடி செல்கின்றனர்.

Read more – ஆந்திராவில் வினோத கோவில் திருவிழா… வறட்டியால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட வழிபாடு..

கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் சுகாதாரத்துறை வெளியிட்ட கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டுள்ளது. மேலும், நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் கூட இந்த மோசமான பாதிப்பு காலத்தில் இந்த கும்பமேளா அவசியமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

Exit mobile version