மருத்துவர்களின் பரிந்துரை இன்றி இனி கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. கடந்த 1 ம் தேதி முதல் 4 ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதனை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இன்றி இனிமேல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனை தொடர்ந்து விருப்பமுள்ளவர்களும் , பயணம் செய்பவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு சான்றிதழ் பெற்றலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.




