ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா ? அனைத்துக்கட்சிகளுடன் இன்று முதல்வர் ஆலோசனை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து முதல்வர் பழனிசாமி அனைத்துக்கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேடர்கள் இல்லாமல் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்கும் வசதிகள் உள்ளது என்றும், எனவே இடை தற்காலிகமாக ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளுக்காக ஆலை இயங்க அனுமதிக்க வேண்டும் வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழக அரசே ஆலையை ஏற்று நடத்தலாம் என்று தெரிவித்தது. இந்தநிலையில், இன்று காலை 9.15 மணிக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடக்க இருக்கிறது.

Read more – மேற்கு வங்க தேர்தலுக்கான 8 ம் கட்ட வாக்குப்பதிவு… அமைதியான முறையில் மக்கள் வாக்களிப்பு..

இந்த கூட்டத்தில் திமுக சார்பில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். மேலும், காங்கிரஸ், பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகளும் பங்கேற்க உள்ளனர்.

Exit mobile version