டெல்லி மருத்துவமனைகளுக்கு போதிய அளவு ஆக்சிஜனை வழங்க மத்திய அரசை இரு கைகூப்பி வேண்டுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவித்தார்.
மேலும், டெல்லியில் நேற்று ஒரே நாளில் 28,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஆக்சிஜன் அளவு இன்னும் 4 மணி நேரம் மட்டும் நீட்டிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
Read more – மக்கள் நீதி மய்யத்தில் இருந்து தீடிரென விலகிய கமீலா நாசர்…
இதையடுத்து, ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மருத்துவமனைகளுக்கு போதிய ஆக்சிஜன் அளிக்க மத்திய அரசை இரு கைகூப்பி வேண்டுவதாகவும், இன்று காலைக்குள் ஆக்சிஜன் அளிக்கப்படாவிட்டால் நகரில் பெரும் குழப்பம் விளையும் என்றும் பதிவிட்டுள்ளார்.




