ஆந்திராவில் வினோத கோவில் திருவிழா… வறட்டியால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட வழிபாடு..

ஆந்திர மாநிலம் கார்னுல் மாவட்ட கோவில் திருவிழா ஒன்றில் வறட்டியால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு வழிபாடு செய்யும் நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கார்னுல் மாவட்டம் அஸ்பாரி மண்டலம் கைருபாலா என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப்பிறப்புக்கு அடுத்தநாள் வெகு சிறப்பாக பிடக்கு என்ற திருவிழா நடைபெறுகிறது. முன்னொரு காலத்தில் பத்ரகாளி அம்மனும், வீரபத்திர சாமியும் காதலித்து, இரு தரப்பினரையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Read more – தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுமா ? கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை..

இதையடுத்து, இரு தரப்பினரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வறட்டியால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டதாக தெரிகிறது. அதன் விளைவாக காலம் காலமாக பொதுமக்கள் இந்த வினோத வழிபாட்டை நடத்தி வருகின்றனர்.

தற்போது, வறட்டியால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Exit mobile version