மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 1.65 கோடி தடுப்பூசி கூடுதலாக ஒதுக்கீடு!!

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 1.65 கோடி தடுப்பூசி கூடுதலாக ஒதுக்கீடு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி, கொரோனா பெருந்தோற்றுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் முதல் நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது; இதுவரை 76,57,17,137 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மத்திய அரசின் தொகுப்பில் இருந்து மாநில மற்றும் யூனியன் அரசுகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி அளவு / கையிறுப்பு / அனுபட்டுள்ள அளவு ஆகியவை மத்திய சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை மத்திய அரசு தொகுப்பில் இருந்து 76,11,49,825 டோஸ் தடுப்பூசி மாநில மற்றும் யூனியன் அரசுகளுக்கு வழங்கியுள்ளது ( தனியார் மருத்துவமனை கணக்கில் இல்லை ).

மேலும், மாநில மற்றும் யூனியன் அரசுகளிடம் 5,33,75,475 டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாகவும், கூடுதல் தேவைக்காக 1 கோடியே 65 லட்சத்து 76 ஆயிரத்து 510 டோஸ் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version