மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு இன்னும் இடம் தரவில்லை என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:
மதுரை தோப்பூர் பகுதியில் 200 ஏக்கர் நிலப்பரப்பிலான 750 படுக்கை வசதியுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை ரூபாய் 1266 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக கடந்த 2019 ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மதுரையில் அடிக்கலும் நாட்டப்பட்டது.
இதற்கான நிதியை ஜப்பானிய பன்னாட்டு முகமை ஜிக்கா நிறுவனம் என்ற அமைப்பு மூலம் கடன் பெறுவதாக முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில்,இதுவரை அந்த நிறுவனத்திடம் இருந்து நிதி பெறவில்லை.மேலும்,தோப்பூர் பகுதியில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது வரை சுற்றுச்சுவர் மட்டுமே எழுப்பட்டுள்ளது.
Read more – வருகின்ற 19 ம் தேதி முதல் திறந்தவெளி மத,அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
இந்நிலையில் மதுரை சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பினார்.அப்பொழுது அந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு,ஜிக்கா நிறுவனங்களுக்கிடம் பெறப்பட இருந்த கடன் ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை என்றும்,அந்த ஒப்பந்தம் கையெழுத்தம் ஆன பின்னர் உடனடியாக கட்டுமான பணி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும்,எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு இன்னும் இடம் தரவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.




