வெண்டிலேட்டர் கிடைக்காமல் தவித்து வரும் பெண் நீதிபதி… டெல்லியில் நாளுக்குநாள் மோசமாகி கொண்டிருக்கும் நிலை..

டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி வெண்டிலேட்டர் கிடைக்காமல் தவித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினசரி 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த தொற்றினை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு முதல் மாநில அரசுகள் வரை திணறி வருகின்றனர்.

டெல்லியில் மட்டும் இந்த கொடூர கொரோனா தொற்றால் நாளொன்றுக்கு 24 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 300 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். இந்தநிலையில், டெல்லியில் தீஸ் ஹஜாரி நீதிமன்ற வளாகத்தில் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வந்த 32 வயதான நுபுர் குப்தா என்ற பெண் கடந்த 22 ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

Read more – கோவிட்ஷீல்டூ தடுப்பூசியின் விலையை குறைத்த சீரம் நிறுவனம்… எவ்வளவு தெரியுமா ?

இதையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை உதவி தேவைப்பட்டு வருகிறது. டெல்லியில் தொடர்ந்து ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் பற்றாக்குறையால் இவருக்கு சிகிச்சை அளிக்கமுடியாமல் மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகிறது.

Exit mobile version