இடதோர இதழோரங்களின்
பள்ளத்தாக்கில் மட்டும்
பூக்கிறாயே எப்படி?
தெரியாமல் கைபட்டு
எழும் பியானோவைப் போல
க்ளுக் என சிரிக்கிறாயே எப்படி?
இப்படிச் சிரித்தால்
என்ன தான் செய்வது?

சிங்கப்பல் தெரிய
கன்னத்தில் குழி விழ
கண்களிலும் புன்னகைக்கிறாயே எப்படி?
இடது புருவம் உயர்த்தி
கீழுதடைக் கடித்துக் கொண்டு
கள்ளச் சிரிப்பு பூக்கிறாயே எப்படி?
இப்படி பூத்தால்
என்ன தான் செய்வது?
தலையை ஆட்டிக் கொண்டு
மேலன்னத்தில் உதடு ஒட்டிக்கொள்ள
கேலிச்சிரிப்பு செய்கிறாயே எப்படி?

கண்கள் சுருங்க
முத்துப் பற்கள் எல்லாம் தெரிய
மனம் விட்டுச் சிரிக்கிறாயே எப்படி?
இப்படி புன்னகைத்தால்
என்ன தான் செய்வது?
-சொற்கோ
இதையும் படியுங்கள் : தங்க மகன்!




