– ம. சிபிஸ்ரீ

பூஞ்சோலை என்றொரு கிராமத்தில் அனிதா என்றொரு பெண் வாழ்ந்து வந்தாள். அவளது தந்தை பெயர் ராமு, தாயின் பெயர் ராணி. அவர்கள் இருவரும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். காலை 5.00 மணிக்குச் சென்றால், மாலை 7.00 மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள். போதிய அளவு வருமானம் இல்லாதக் காரணத்தினால் அவர்களது வாழ்க்கை மிகவும் போராட்டமாகவே இருந்தது. ஆகையால் அனிதா ஐந்தாம் வகுப்புக்கு மேல் பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை.
அனிதாவோ நன்றாகப் படிக்கக்கூடிய பெண் என்பதால், அவள் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் பலர் அவளைப் படிக்க வைக்க முன்வந்தார்கள். ஆனால் அவளது பெற்றோர்கள் வீட்டுவேலை செய்ய வேண்டும் என்பதற்காக, அவளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.
சில நாட்கள் சென்றன. பிறகு அனிதாவும் அவளது தாய், தந்தையுடன் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டாள். அவளுக்கு இருபது வயது ஆனவுடன் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.
திருமணத்திற்கு பிறகும் அவளது வாழ்க்கை வீட்டு வேலை செய்வதும், கூலி வேலைக்குச் செல்வதுமாகவே இருந்தது. சில வருடங்கள் கழிந்தன. எதிர்பாராதவிதமாக அனிதாவின் கணவர் இறந்துவிட்டார். அவளது கணவர் ஒரு மளிகைக்கடையில் கணக்கர் வேலைக்குச் சென்றுக் கொண்டிருந்தார். அவள் படிக்காக்த காரணத்தால் அந்தக் கடையில் அவளுக்கு வேலை கொடுக்க மறுத்துவிட்டனர். பிறகு அவள் சுயஉதவிக்குழு மூலமாக, சிறிது கடன் பெற்று ஒரு தொழிலைத் தொடங்கினாள்.
“முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைபிடிக்கும், முயன்று எழுந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்” என்பதற்கேற்ப… விடாமுயற்சியுடன் உழைத்து தொழிலில் வெற்றியும் கண்டாள்.
குடும்பத்திலுள்ள அனைவரையும் அவள் ஒருத்தியே காப்பாற்றினாள். இக்கதை மூலமாக ஒரு பெண்ணால் முடியாதது எதுவுமில்லை, இந்தச் சமுதாயம் பெண்களை புறக்கணித்தாலும், அவர்களின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்கமுடியாது என்பதை, இச்சிறுகதையின் மூலம் உணர்கிறோம்.
– கதைப் படிக்கலாம் – 81
இதையும் படியுங்கள் : விசில்




